சிங்கப்பூரில் பெண்மணி ஒருவர் இறந்ததற்கு தடுப்பூசி காரணம் இல்லை – சுகாதார அமைச்சகம்

சிங்கப்பூரில் 72 வயதான பெண்மணி ஒருவர் இறந்ததற்கு தடுப்பூசி காரணம் இல்லை என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது

கோவிட் -19 முதல் டோஸ் தடுப்பூசி போட்ட பிறகு அவருக்கு ஏற்பட்ட ஒவ்வாமைக்கு தடுப்பூசி காரணம் இல்லை என்றும் MOH கூறியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டவர் கைது

பெண்மணியின் மகன் எழுப்பிய கேள்விகளுக்கு MOH பதிலளித்துள்ளது, அதாவது அவர் “தடுப்பூசியால் தனது தாயின் மரணம் ஏற்பட்டிருக்கலாமா,? ” என்று கேள்வி எழுப்பினார்.

கடந்த ஜூன் 3ஆம் தேதி, Pfizer BioNTech தடுப்பூசியின் முதல் டோஸை அவர் போட்டுக்கொண்டார்.

அதனை அடுத்து, மறுநாள் இரவு 7.15 மணியளவில் அவர் நிலைகுலைந்தார், பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் செங்காங் பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால், அவர் இரவு 9 மணியளவில் உயிரிழந்தார் என்று MOH கூறியுள்ளது. அவருக்கு இரத்த நாளங்களில் அடைப்பு இருந்ததாகவும், இதய நோய் தான் இறப்புக்கு காரணம் என்றும் உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 3 வாரங்களுக்கு சம்பள ஆதரவு!

Related Articles

Back to top button