தனிநபர் நடமாடும் சாதனம் (PMD) தீப்பிடித்து விபத்து – ஆடவர் சிகிச்சை பலனின்றி மரணம்

உட்லேண்ட்ஸில் பிளாக்கின் லிப்டில், தனிநபர் நடமாடும் சாதனம் (PMD) தீப்பிடித்ததில் 20 வயது இளைஞர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்று (ஜூன் 3) இரவு 11.25 மணியளவில் பிளாக் 537 உட்லேண்ட்ஸ் டிரைவ் 16இன் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.

இதையும் படிங்க : “சிங்கப்பூரில் சூழல் தொடர்ந்து மேம்படும் பட்சத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம்”

இதுகுறித்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பு பொதுமக்கள் வாளி தண்ணீரைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அந்த ஆடவர் சுயநினைவுடன் இருந்தார், ஆனால் அதன் பின்னர் அவருக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக இறந்தார் என்று சிங்கப்பூர் காவல் படை தெரிவித்துள்ளது.

அங்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 90 குடியிருப்பாளர்களும் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்துக்கான முதற்கட்ட விசாரணையில், PMD சாதனத்தில் மின்சாரக் கோளாறு ஏற்பட்டதாக SCDF தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து உதவி வரும் சிங்கப்பூர் – திருப்பூருக்கு மருத்துவ பொருட்கள் வழங்கியது!

Related Articles

Back to top button