‘Work Pass’ அனுமதி பெற போலியான கல்வித் தகுதியை வழங்கிய இந்திய ஊழியர்களுக்கு சிறை!

சிங்கப்பூரில் ‘Work Pass’ வேலை அனுமதி பெற போலியான கல்வித் தகுதியை வழங்கிய இந்திய ஊழியர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போலியான கல்வித் தகுதியை சமர்ப்பித்த 2 இந்திய ஊழியர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள், தங்களது work pass அனுமதி விண்ணப்பங்களில் தவறான கல்வித் தகுதிகளை மனிதவள அமைச்சகத்திற்கு (MOM) சமர்ப்பித்துள்ளனர்.
இதில், பெயில்வால் சுனில் தத்க்கு ஒரு வார சிறைத்தண்டனையும், சூத்ரதர் பிஜோய் என்பவருக்கு நான்கு வாரம் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் Work pass ரத்து செய்யப்பட்டு, அவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்ய நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளனர் என்று MOM தெரிவித்துள்ளது.