#JUSTIN: கட்டுமானம், கடல் துறைகளில் உள்ள Work permit வெளிநாட்டு ஊழியர்களுக்கு MOM முக்கிய அறிவிப்பு!

கட்டுமானம், கடல்சார் மற்றும் செயல்முறை துறைகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரி தள்ளுபடி ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Work permit வேலை அனுமதி வைத்திருப்பவர்களுக்கு வரி தள்ளுபடி மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் MOM கூறியுள்ளது.
ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு S$250 மற்றும் ஜூன் மாதத்திற்கு S$200 வரி தள்ளுபடி செய்யப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
இந்த வரி சலுகை நடவடிக்கைகள் இந்த மாத இறுதியில் காலாவதியாக இருந்தது, இதில் வெளிநாட்டு ஊழியர் வரி தள்ளுபடியும் அடங்கும்.
தொற்றுநோயால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில் வணிகங்களுக்கு உதவுவதற்காக இந்த தள்ளுபடி நடவடிக்கை 2020ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singapore-வுடன் இணைந்து இருங்கள்!
Tamil Daily Singapore Telegram: https://t.me/tamildailysg
சாங்கி ஏர்போர்ட்டில் பலே திட்டம் போட்ட இரு வெளிநாட்டு ஊழியர்கள்; தமிழ் வம்சாவளி ஊழியருக்கு சிறை!