Hostessing சேவை செய்த 29 பெண்கள் அதிரடி கைது: Work permit இல்லை – இரு ஆண்கள் கைது… சிங்கையில் போலீஸ் வேட்டை

சிங்கப்பூரில் இரண்டு பொது பொழுதுபோக்கு நிலையங்கள் hostessing சேவைகளை வழங்கிய சந்தேகத்தில் 31 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த செப். 3 ஆம் தேதி அன்று மிடில் ரோட்டில் உள்ள பொது பொழுதுபோக்கு நிலையங்களில் அமலாக்கப் பிரிவு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஊழியர்களை வேலையை விட்டு தூக்கும் பிரபல சிங்கப்பூர் நிறுவனம் – வேறு வேலை இல்லாமல் தவிக்கும் நிலை

அங்கு 29 மற்றும் 33 வயதுக்கு உட்பட்ட மொத்தம் 29 பெண்கள் hostessing சேவைகளை வழங்கியதாகவும், முறையான work permit இல்லாமல் பணிபுரிந்ததற்காகவும் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு ஆட்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பான குற்றங்களுக்காக 31 மற்றும் 35 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Work permit இல்லாமல் வெளிநாட்டு ஊழியரை பணியமர்த்துவது கண்டறியப்பட்டால் S$5,000 முதல் S$30,000 வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் – மீறினால் சிறை

Related Articles

Back to top button