சிங்கப்பூரில் மேலும் ஒரு ஊழியர் பலி – கடும் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

Singapore: சிங்கப்பூரில் வேலையிடத்தில் லாரி மோதிய விபத்தில் சிக்கிய 69 வயதுமிக்க துப்புரவு ஊழியர் பலியானார்.
இந்த விபத்து நேற்று முந்திய நாள் புதன்கிழமை (அக். 5) நடந்தது. லாரி பின்னோக்கி சென்று ஊழியர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த ஆண்டு மட்டும் சிங்கப்பூரில் வேலையிட விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. 2021ல் மொத்தமே 37 வேலையிட இறப்புக்கள் தான் பதிவானது.
சிங்கப்பூரில் 1 ஹௌகங் ஸ்ட்ரீட் 91ல் உள்ள ஹௌகங் 1 வணிக வளாகத்தில் புதன்கிழமை காலை 9.50 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) கூறியது.
விபத்தை அடுத்து ஊழியர் செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பயனளிக்கமால் அவர் உயிரிழந்தார்.