சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஊழியர்; விமான நிலையத்திலேயே கைது – அவர் செய்தது என்ன?

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஊழியர் கைது செய்யப்பட்டார் என கூறப்பட்டுள்ளது.
அவர் 35 வயதான ராஜா மோகன் என்றும், அவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது.
இவர் மீது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக அவரின் மனைவி நெல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து போலீசில் இருந்து தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்துள்ளனர். அவர் சிங்கப்பூர் சென்று அங்கேயே வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அவர் தேடும் குற்றவாளி லிஸ்டில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த அவரை சோதித்த அதிகாரிகள் அப்டியே அலேக்காக தூக்கி போலீசிடம் ஒப்படைத்தனர்.
நெல்லை போலீசார் ஊழியரை தூக்கி செல்ல சென்னை வந்துகொண்டிருப்பதாக செய்திகள் கூறியுள்ளன.