சிங்கப்பூரில் வேலையின்போது பலியான ஊழியர்: “இனிமே பொறுக்க முடியாது”…கலத்தில் இறங்கிய மனிதவள அமைச்சகம்

சிங்கப்பூரில் லாரி ஓட்டுநர் ஒருவர் கடந்த ஆகஸ்டு 25ஆம் தேதி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் பணிபுரிந்த கட்டுமான நிறுவனமான Synergy-Biz இடங்களில் மனிதவள அமைச்சகம் (MOM) அடுத்த நாளே சோதனையில் இறங்கியது.
சிங்கப்பூரில் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட சோதனை – Work pass இல்லாத வெளிநாட்டு ஊழியர் உட்பட ஐவர் கைது
ஏனெனில் ஊழியர்களின் மரணம் அதிகரித்ததை அடுத்து, நிறுவனங்கள் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என முன்னரே MOM வலியுறுத்து எச்சரிக்கையும் செய்தது.
இதனை அடுத்து MOM மேற்கொண்ட சோதனையில், ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற நிலைகள் அங்கு நிலவியது கண்டறியப்பட்டது.
இந்த நிலையை அடுத்து அந்நிறுவனத்துக்கு வேலை நிறுத்த உத்தரவும், S$6,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
65 வயதான அந்த சிங்கப்பூர் ஊழியர் ஃபோர்க்லிஃப்ட் இயந்திர விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது கூடுதலான செய்தி.