சிங்கப்பூரில் வேலையின்போது 9வது மாடி உயரத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ஊழியர் – பதைபதைக்கும் வீடியோ

சிங்கப்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மற்றும் ஒன்பதாவது மாடிகளுக்கு இடையே சிக்கித் தவித்த ஊழியர் பற்றி SCDF படைக்கு தகவல் வந்தது.
நேற்று செப்.30 நடந்த இந்த சம்பவத்தில் உயரத்தில் இருந்து வேலை செய்ய பயன்படும் லிப்ட் அமைப்பில் ஊழியர் குறைந்தது 40 நிமிடங்கள் மாட்டிக்கொண்டதாக SCDF செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் தமிழ் ஊழியருக்கு சிறை: கழிவறையில் எட்டிப்பார்த்த ஊழியர் – அலறியடித்த பெண் புகார்
ஊழியர் மாட்டிக்கொண்டு தவிப்பது குறித்து SCDFக்கு நேற்று மாலை 5.30 மணிக்கு தகவல் வந்தது. புக்கிட் பாத்தோக் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் பிளாக் 104 டெக் வை லேனுக்கு விரைந்து வந்தனர்.
லிப்ட் அமைப்பில் இருந்து ஊழியரை எப்படியாவது காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்போடு SCDF தீவீரமாக செயல்பட்டது.
பின்னர் SCDF Dart குழு வீரர்கள், கயிறு கட்டி ஊழியரை பாதுகாப்பாக கீழே இறக்கினர். பின்னர் அவரை சோதித்த SCDF மருத்துவர்கள் கண்ணுக்குத் தெரியும் காயங்கள் அவருக்கு எதுவும் இல்லை என்று உறுதி செய்தனர்.
அதனால் ஊழியரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல SCDF மறுத்துவிட்டது.
Video: SCDF/Facebook
கோழி, ஆடு, மாட்டிறைச்சிகளை கொண்டு வந்த வெளிநாட்டு ஊழியர் – சாங்கி ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம்