“எங்களுக்கு சம்பளம் வேண்டும்” – போராட்டத்தில் குதித்த வெளிநாட்டு ஊழியர்கள் – சிங்கப்பூரில் பரபர

ஆங் மோ கியோவில் உள்ள கட்டிடத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் இடத்தை தடுக்கும் வகையில் போராட்டம் செய்ததாக ஒன்பது ஆண்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 1.50 மணியளவில் 5 ஆங் மோ கியோ ஸ்ட்ரீட் 62 இல் நடந்த இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு அழைப்பு வந்தது.
இதையும் படிங்க: இந்திய ஊழியரை அடித்து தாக்கிய ஓட்டுநர் – “பாதுகாப்பா வாகனம் ஓட்டு பா” என்று சொன்னதற்கு கிடைத்த வெகுமதி
அவர்கள் 28 முதல் 54 வயதுக்குட்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தங்களின் சம்பளத்தை கேட்டு அவர்கள் பலகைகளை ஏந்திக் கொண்டே கட்டிடத்தின் நுழைவாயிலையும், வெளியேறுவதையும் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், அந்த ஊழியர்களை தடுத்து நிறுத்தி, அவ்வாறு செய்ய கூடாது என்று அறிவுறுத்தினர். அதற்கு அவர்கள் கட்டுப்பட்டனர்.
சிங்கப்பூரில் அனுமதியின்றி பொது இடத்தில் கூட்டம் நடத்துவது குற்றமாகும், இதற்காக தற்போது அவர்கள் போலீஸ் விசாரணையில் உதவி வருகின்றனர் என சிங்கப்பூர் காவல் படை (SPF) கூறியது.
அனுமதியின்றி பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற குற்றத்திற்கு S$3,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இதையும் படிங்க: சிங்கப்பூர் மெரினா பே சாண்ட்ஸ்யை “குஜராத் அரசு மருத்துவமனை” என ட்வீட் – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்