வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி 7 அறையில் இடிந்து விழுந்த மேல்தளம் – 100 பேர் வெளியேற்றம்; பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன ?

உட்லண்ட்ஸில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர் தங்கும் விடுதியில் மேற் கூரை கடந்த ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் காயங்களுக்கு ஆளாகினர்.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் வீடியோ காட்சிகளில் மூலம் அறையின் மேல் தளம் இடிந்து கீழ் கிடப்பதை காணலாம்.
தொழிலாளர்கள் தங்கள் பொருட்களைக் கட்டிக்கொண்டு அறையை விட்டு வெளியேறுவதையும் அதில் காணலாம்.
நார்த் கோஸ்ட் லாட்ஜ் தங்கும் விடுதியில் ஏழு அறைகளில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்தது என்று மனிதவள அமைச்சகம் (MOM) சொன்னது.
இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் மனிதவள அமைச்சகம் (MOM) கூறியது, கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக இது ஏற்பட்டு இருக்கலாம் என கூறியது.
காயமடைந்த இரண்டு ஊழியர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.