யிஷூனில் உள்ள குடியிருப்பில் தீ… 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

யிஷூனில் உள்ள பொது குடியிருப்பு பிளாக்கில் இன்று (ஜூன் 29) காலை தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, காவல்துறை அதிகாரி உட்பட 10 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பிளாக் 141 யிஷுன் ரிங் ரோட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காலை 8.30 மணிக்கு சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படைக்கு (SCDF) தகவல் கொடுக்கப்பட்டது.

வேண்டுமென்றே அத்துமீறி பாதுகாக்கப்பட்ட இடத்திற்குள் நுழைந்த சந்தேகத்தின்பேரில் 11 பேர் கைது

மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது மாடிகளில் உள்ள மூன்று வீடுகளின் படுக்கையறைகளில் தீ மூண்டது.

இந்த தீயினால் ஏற்பட்ட புகைமூட்டம் மூன்று வீடுகளின் மற்ற பகுதிகளையும் சேதப்படுத்தியதாக SCDF பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

பின்னர், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

SCDF அதிகாரிகள் வருவதற்கு முன்பு, பிளாக்கின் 2 முதல் 10வது மாடி வரை உள்ள சுமார் 100 குடியிருப்பாளர்கள் தாமாகவே வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சகோதரியை கொலை செய்ததாக சகோதரர் மீது குற்றச்சாட்டு

Related Articles

Back to top button