சம்பளம் இல்லாமல் தவிக்கும் 14 தமிழர்கள்: சொந்த ஊருக்கு திரும்ப முடிவு

வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் தமிழக ஊழியர்கள் 14 பேர், கடந்த 3 மாதங்களாக சம்பளம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
மாலத்தீவில் உள்ள ஹுலு மாலியில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் 17 நபர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் கொடுக்காமல் அந்த நிறுவனம் வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க கூடாது… நிறுவனத்துக்கு மனிதவள அமைச்சகம் உத்தரவு
அவர்களில் 14 பேர் தமிழர்கள் என்றும், மீதமுள்ள மூவர் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்நிறுவனம் தற்போது நஷ்டத்தில் இயங்கி வரும் காரணத்தால் அதனால் சம்பளத்தை கொடுக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில், அவர்கள் அனைவரும் தாயகம் திரும்ப உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளையும் தூதரகம் செய்து வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.