சிங்கப்பூரில் வேலை செய்யும் கணவர்; மனைவி கழுத்தில் 5 பவுன் சங்கிலி பறிப்பு – பட்டப்பகலில் மர்ம கும்பல் துணிகரம்

சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியரின் மனைவி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை மர்ம கும்பல் பறித்து சென்றுள்ளது.

ஊழியர் சிவக்குமார் புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் பகுதி தச்சமல்லி கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி கலைமதி (வயது 35) என்ற மனைவி உள்ளார்.

கணவர் சிங்கப்பூரில் வேலை செய்துவரும் சூழலில், மனைவி கலைமதி தற்போது காரைக்குடி அருகே வசித்து வருகிறார். கடந்த அக்.10 ஆம் தேதி, கலைமதி மொபட் வண்டியில் தனது குழந்தையுடன் வெளியே சென்றுகொண்டு இருந்தார்.

இதையும் படிங்க“நீ வெர்ஜின் பெண்ணா.. ஆபாச வீடியோ பார்” – 16 வயது பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஊழியர்

அப்போது ஏம்பல் பிரிவு சாலையின் அருகே வண்டியை நிறுத்தியுள்ளார். அவர் குழந்தைக்கு தாகம் இருக்கும் என்பதால் தண்ணீர் கொடுக்க நிறுத்தியதாக சொல்லப்படுகிறது.

அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து வந்த மர்ம கும்பல், கலைமதி அணிந்திருந்த சுமார் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளனர்.

இதனை அடுத்து என்ன செய்வது என்று அறியாது இருந்த கலைமதி, இது குறித்து போலீசிடம் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஏம்பல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேவை இல்லாத செய்திகளை தவிர்த்து, சிங்கப்பூர் “தமிழ் ஊழியர்கள்”, “வேலைவாய்ப்புகள்” தொடர்பான செய்திகளை மட்டும் அறிந்திட நம் டெலிக்ராம் பக்கத்தில் இணைந்து இருங்கள்

இதையும் படிங்கசிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அதிரடி அறிவிப்புகள்

Related Articles

Back to top button