“கோவை-சிங்கப்பூர்” இடையே பறக்கும் பயணிகளுக்கு செம்ம நியூஸ்! – வாரம் ஏழு நாட்களும் வழக்கமான விமான சேவை!
பயணிகளுக்கு கனிவான தகவல்!

“கோவை-சிங்கப்பூர்” இடையே பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு கனிவான தகவல் என்றே கூறலாம்.
வரும் மார்ச் 27ஆம் தேதி முதல் கோவை – சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவை தொடங்க உள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு துவக்கத்திலேயே கொரோனா காரணமாக வெளிநாடுகளுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டது.
அதனை அடுத்து, கொரோனா வேகம் சற்று குறைந்ததும் கோவை-அமீரக சார்ஜா இடையே விமான சேவை துவங்கியது.
பின்னர் கடந்த ஜன. மாதம் முதல் கோவை-சிங்கப்பூர் இடையே விமான சேவை ஆரம்பித்தது.
இதனை Scoot நிறுவனம், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டுமே வழங்கி வந்தது.
இந்நிலையில், கோவை-சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவை மார்ச் 27 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.
பயணிகள் பயன்பெறும் வகையில், கோவை – சிங்கப்பூர் இடையே வாரம் ஏழு நாட்களும் விமான சேவை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வேலை செய்து வந்த தமிழக ஊழியர்: “மனைவி கொடுத்த புகார்” – ஊழியரை தூக்கிய போலீசார்!
வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singapore-வுடன் இணைந்து இருங்கள்!
Telegram: https://t.me/tamildailysg
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த தஞ்சாவூர் ஊழியர் அதிரடி கைது – இந்த தவறை யாரும் செய்ய வேண்டாம்!