சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியருக்கு திருமணம் செய்யப்பட இருந்த பெண்… வீடியோ எடுத்து மிரட்டல் – தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் அங்குள்ள அரசு கலைக் கல்லூரியில் பயின்று வருகிறார்.

அந்த கல்லூரி மாணவிக்கு, சிங்கப்பூரில் பணிபுரியும் நரியன்குளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரின் உறவினர்கள் முடிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை (மார்ச் 30) அன்று மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் கடிதம் ஒன்று இருந்துள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் இருவர் சம்பவ இடத்திலேயே பலி – துவாஸில் நடந்த கொடூர சம்பவம்

இறப்பதற்கு முன்னர் அவர் எழுதியிருந்த கடிதத்தில், ஒருத்தன் நான் குளிப்பதை வீடியோ எடுத்து என்னை பிளாக்மெயில் பண்றான். அவனிடம் இருந்து தப்பிக்க எனக்கு வேற வழி தெரியவில்லை. என்னை மன்னிச்சிடு அம்மா. எனக்கு அதிகநாள் வாழ ஆசைதான். ஆனால் என்ன பண்ண கடவுள் என்னை வாழ விடல என எழுதியுள்ளார்.

மாணவி இறப்பதற்கு முன்னர் அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில் இருந்த வார்த்தைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singapore-வுடன் இணைந்து இருங்கள்!

Tamil Daily Singapore Telegram: https://t.me/tamildailysg

சிங்கப்பூரிலிருந்து தாயகம் திரும்பி ஆசையாய் வாங்கிய எலக்ட்ரிக் பைக்; திடீரென தீப்பற்றி எரிந்த அதிர்ச்சி!

Related Articles

Back to top button