வேலையின்போது பலியான தமிழக ஊழியர் – வெளிநாடு வாழ் தமிழர் திட்டத்தின்கீழ் நிதியுதவி

வெளிநாட்டில் வேலையில் இருந்தபோது உயிரிழந்த தமிழக ஊழியருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, ஊழியரின் குடும்பத்தினருக்கு அந்த நிதியுதவியை வழங்கினார்.
லாரி-பேருந்து மோதி கடும் விபத்து; பேருந்தில் பயணித்த 20 பேரின் நிலை?
தவப்பாண்டி என்ற தமிழக ஊழியர், மானாமதுரை அருகே அமைந்துள்ள மிளகனூர் பகுதியை சேர்ந்தவர்.
இவர் சவூதி அரேபியா நாட்டில் பணியாற்றி வந்த நிலையில் அண்மையில் தான் உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது இறப்புக்கான நிவாரணமாக அவரின் குடும்பத்தினருக்கு தொகை வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் தமிழர் திட்டத்திலிருந்து சுமார் ரூ. 2 லட்சத்து 13 ஆயிரத்து 213 என்ற தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த தொகை தவப்பாண்டியின் மனைவி சத்யாவிடம் வழங்கப்பட்டது.
சிங்கப்பூரில் பலியான மேலும் ஒரு ஊழியர் – வாழ்வா? சாவா? வாழ்க்கை போராட்டம்