சாங்கி ஏர்போர்ட்டில் பலே திட்டம் போட்ட இரு வெளிநாட்டு ஊழியர்கள்; தமிழ் வம்சாவளி ஊழியருக்கு சிறை!

ஜெகதீசனுக்கு நான்கு மாத சிறைத்தண்டனை!

வேலையில்லாமல் இருந்த தமிழ் வம்சாவளியை சேர்ந்த மலேசியர் ஊழியர் ஒருவர் தனது பெயரில் உள்ள போர்டிங் பாஸை மற்றொரு ஊழியரிடம் கொடுக்க ஒப்புக்கொண்டார்.

இலங்கையைச் சேர்ந்த மற்றொரு ஊழியர், நல்ல வேலை வாய்ப்பை பெற வேண்டி ஜெர்மனி செல்ல விரும்பினார்.

சிங்கப்பூரில் ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்த தமிழக ஊழியர்; விதிகள் மீறப்பட்டதே காரணம்

அதற்காக மலேசியர் ஊழியர் பணத்தை பெற்றுக்கொண்டு போர்டிங் பாஸை அவரிடம் கொடுத்துள்ளார்.

பிப்ரவரி 10 அன்று கோலாலம்பூர் மற்றும் கொழும்பில் இருந்து தனித்தனியாக வந்த இவர்கள், சாங்கி விமான நிலையத்தில் சந்தித்தனர், மேலும் கழிப்பறையில் இந்த பரிமாற்றம் நடந்துள்ளது.

கடந்த வியாழன் (மார்ச் 24) அன்று மலேசியாவைச் சேர்ந்த தஸ்ரதன் ஜெகதீசன் (49) மோசடி குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், ஜெகதீசனுக்கு நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singapore-வுடன் இணைந்து இருங்கள்!

Tamil Daily Singapore Telegram: https://t.me/tamildailysg

சிங்கப்பூரில் உயர லிஃப்டில் வேலை செய்துகொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர்கள்; திடீரெனெ அறுந்த கேபிள் – கதறிய ஊழியர்கள்

Related Articles

Back to top button