சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த தஞ்சாவூர் ஊழியர் அதிரடி கைது – இந்த தவறை யாரும் செய்ய வேண்டாம்!
போலீசார் வழக்குப்பதிவு!

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஊழியர் போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.
இண்டிகோ விமானத்தில் நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு வந்த ஊழியரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
என்ன குற்றம் செய்தார் என்று அனைவரும் அதிர்ச்சியில் பார்த்து இருக்கையில், அவர் போலி பாஸ்போர்ட் மூலம் பயணித்து வந்தது கண்டறியப்பட்டது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஆம்பலாப்பட்டு ஊரை சேர்ந்தவர் 48 வயதான சக்திவேல் என்ற அந்த ஊழியர்.
அவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்துள்ளார், இந்நிலையில் அவர் போலியான முகவரியை வைத்து கொண்டு பயணம் செய்து வந்தது கண்டறியப்பட்டது.
சதாசிவம் கலையரசன் (48 வயது) என்ற பெயர், ஒரத்தநாடு ஆம்பலாப்பட்டு புலவர் காடு என்ற முகவரியில் அந்த போலி பாஸ்போர்ட் இருந்துள்ளது.
அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singaporeவுடன் இணைந்து இருங்கள்..!
தமிழ்நாட்டில் இருந்து இனி ஈஸியா சிங்கப்பூர் செல்லலாம் – மதுரையில் இருந்து தினசரி விமானம்!