சிங்கப்பூரில் வேலை செய்து வந்த தமிழக ஊழியர்: “மனைவி கொடுத்த புகார்” – ஊழியரை தூக்கிய போலீசார்!

கொலை மிரட்டல்!

சிங்கப்பூரில் வேலை செய்து வந்த ஊழியர் மீது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

33 வயதான கண்ணன் என்ற அவர் காரைக்குடி, பாப்பா ஊரணி பகுதியை சேர்ந்தவர், இவர் மவுனிகா என்ற பெண்ணை 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த தஞ்சாவூர் ஊழியர் அதிரடி கைது – இந்த தவறை யாரும் செய்ய வேண்டாம்!

சிங்கப்பூர் வேலை மீது மோகம் கொண்ட கண்ணன், அங்கு செல்வதற்காக மவுனிகாவிடம் பணம் தருமாறு கேட்டு ரகளை செய்துள்ளார்.

இதனை அடுத்து திருமணம் முடிந்த 2 மாதத்தில் கண்ணன் சிங்கப்பூர் செல்ல, அங்கிருந்து கொண்டு வேறு பெண்ணுடன் போன் மூலமாக பேசி வந்துள்ளார்.

பின்னர், மனைவிக்கு தகவல் கொடுக்காமல் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் வந்தும் அந்த பெண்ணின் வீட்டில் தங்கியுள்ளார் கண்ணன்.

மவுனிகா இதுபற்றி கேட்டபோது அதற்கு அவரை அடித்து, கொலை செய்து விடுவதாக மிரட்டியும் உள்ளார் அவர்.

பின்னர், மவுனிகா இதுபற்றி மகளிர் போலீசாரிடம் புகார் கொடுக்க, அவர்கள் கண்ணனை கைது செய்தனர்.

வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singapore-வுடன் இணைந்து இருங்கள் – Telegram: https://t.me/tamildailysg

சிங்கப்பூரில் தமிழக ஊழியரின் நிலை என்ன ஆனது? தமிழக முதல்வருக்கு சென்ற கோரிக்கை – கண்ணீரில் குடும்பம்.!

Related Articles

Back to top button