தமிழ்நாட்டில் இருந்து இனி ஈஸியா சிங்கப்பூர் செல்லலாம் – மதுரையில் இருந்து தினசரி விமானம்!
வரும் மார்ச் 29 முதல்...

மதுரை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சர்வதேச விமான சேவை இயங்கி வருகிறது.
அதாவது UAE, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் மதுரையில் இருந்து இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், சிங்கப்பூருக்கு புதிதாக மதுரையில் இருந்து வரும் மார்ச் 29 முதல் விமான சேவை தொடங்க உள்ளது.
இந்த சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அக்டோபர் 29ம் தேதி வரை இயக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமும் மாலை 5 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு மாலை 6.40 மணிக்கு விமானம் வந்துசேரும்.
அதேபோல, தினமும் இரவு 9.35 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு காலை 4.30 மணிக்கு சிங்கப்பூருக்கு விமானம் செல்லும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singaporeவுடன் இணைந்து இருங்கள்..!
வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்தால் நிறுவனங்கள் இனி இதை செய்வது கட்டாயம்!