சிங்கப்பூரில் இருந்து திரும்பிய ஊழியர் திருச்சியில் கைது – பாஸ்போர்ட் சோதனையில் குற்றம் அம்பலம்

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிகளை குடிநுழைவு சோதனை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சிங்கப்பூரில் வேலையின்போது 9வது மாடி உயரத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ஊழியர் – பதைபதைக்கும் வீடியோ
அப்போது சிவகங்கை – திருமயம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுமிக்க ஊழியர் ராமசாமி என்பவரையும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அதில் அந்த ஊழியர் பொய்யான முகவரியில் போலி பாஸ்போர்ட் பெற்று சிங்கப்பூர் வந்தது அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.
இதையடுத்து பிடிபட்ட ஊழியர் மீது போலீசார் கைது செய்து பின்னர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சிங்கப்பூரில் தமிழ் ஊழியருக்கு சிறை: கழிவறையில் எட்டிப்பார்த்த ஊழியர் – அலறியடித்த பெண் புகார்