சிங்கப்பூர் மெரினா பே சாண்ட்ஸ்யை “குஜராத் அரசு மருத்துவமனை” என ட்வீட் – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலை, அவரின் பெயரில் “அண்ணாமலை ஆர்மி” என்று இயங்கும் ட்விட்டர் பக்கத்தில் வெளியான போட்டோ ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறது.

அந்த போட்டோவில் குஜராத் அரசு மருத்துவமனை என்று சிங்கப்பூர் மெரினா பே சாண்ட்ஸ் புகைப்படம் பதிவேற்றப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வாரத்தில் 4 நாள் வேலை; ஊழியர்கள் மிகுந்த ஆர்வம் – நிறுவனங்கள் தயாரா?

இதனை கண்ட நெட்டிசன்கள் அதனை கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

அதற்கு ஒருவர் “இது குஜராத் அரசு மருத்துவமனையா.. நான் கூட சிங்கப்பூர்ல இருக்குற மெரினா பே சாண்ட்ஸ்ன்னு தப்பா நினைச்சிட்டேன்” என்று கமெண்ட் செய்துள்ளார்.

இறுதியாக அந்த பக்கத்தை ஆராய்ந்து பார்த்ததில் அது ட்ரோல் செய்யும் பக்கம் என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: வெளிநாட்டு ஊழியர்களே உஷார் – சிக்கிய பல்வேறு நாடுகளை சேர்ந்த 24 ஊழியர்கள்: சிங்கப்பூரில் இந்த தப்பை செய்யாதீங்க!

Related Articles

Back to top button