சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழக ஊழியர் தற்கொலை – தமிழ்நாட்டில் பெண் மர்ம சாவு… சில மணிநேரங்களில் நடந்த கொடூரம்

சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழக ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த செவிலியர் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
இதை அடுத்து செவிலியர் சடலத்தை நேற்று முன்தினம் பைக்கில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின்னர் அவசர அவசரமாக சடலத்தை தகனம் செய்துள்ளனர் உறவினர்கள்.
சிங்கப்பூர் கடலில் விழுந்து காணாமல் போன வெளிநாட்டு ஊழியர்; இரு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு
இந்த செவிலியர் கடந்த சில வருடங்களாக சிங்கப்பூரில் பணியாற்றி, கடந்த 10 நாட்கள் முன்பு தான் அறந்தாங்கி வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்துமுடிந்த சில மணி நேரங்களில் சிங்கப்பூர் தமிழ் ஊழியரின் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது, சிங்கப்பூரில் பணிபுரியும் அறந்தாங்கி புள்ளைவயல் பகுதியை சேர்ந்த ஊழியர் கார்த்திக் தற்கொலை செய்துகொண்டார் என கூறப்படுகிறது.
‘நாங்க ஒண்ணா சேரப் போறோம்… இனிமேல் எங்களை யாராலும் பிரிக்க முடியாது…”Love u all, அவ்ளோ தான் எல்லாம் முடிந்தது.. bye” என்று வாட்சப் ஸ்டேட்ஸில் வைத்துவிட்டு சிங்கப்பூரில் உள்ள அவரின் உறவினர் ஒருவருக்கு லொகேஷன் அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இறுதியாக லொகேஷன் சென்று பார்த்தால் பீச்சில் தூக்கில் தொங்குவிட்டார் என தகவல் கொடுத்துள்ளார் அவரின் உறவினர்.
இதனை அடுத்து, அவரின் உறவினர் சிங்கப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்தில் கார்த்திக் உடலை கைப்பற்றிய போலீஸ் பிரேத பரிசோதனைக்கு சடலத்தை அனுப்பியது.
இந்நிலையில், கார்த்திக் உடல் நாளை வெள்ளிக்கிழமை சொந்த ஊர் வரலாம் என கூறப்படுகிறது.
அந்த பெண் செவிலியர் மர்மமான முறையில் இறந்துள்ளார், அதனை அடுத்த அவரின் உறவினர்கள் அவசர அவசரமாக சடலத்தை தகனம் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதுபற்றி புகார் பெற்ற போலீசார், செவிலியரின் உறவினர்கள் மீது விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் தான் உண்மை வெளிவரும்.
தமிழ்நாட்டில் பெண் இறந்த சில மணிநேரத்தில் சிங்கப்பூரில் தமிழர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அனைவருக்கும் ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் வேலை பார்க்கும் கணவர்; வீடியோ கால் விபரீதம்… உயிரை மாய்துகொண்ட மனைவி