சிங்கப்பூரில் வேலை பார்க்கும் ஊழியரின் பலே திட்டம் – மனைவி கைது; ஊருக்கு வந்துதானே ஆகணும்? காத்திருக்கும் போலீஸ்

சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பலரை ஏமாற்றிய நிலையில் தமிழக காவல்துறையினர் அவருக்கு ஸ்கெட்ச் போட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்தவர் அமுதா என்ற 26 வயதுமிக்க பெண், இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், அமுதாவுக்கு அவர்களின் நண்பர்கள் மூலம் 38 வயதுமிக்க அஜய் ரமேஷ் என்பவரின் தொடர்பு கிடைத்துள்ளது.
சிங்கப்பூரில் வேலை வேண்டுமா ?
அவரிடம் பேச தொடங்கிய சில நாட்களிலே தாம் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருவதாகவும், “யாருக்கேனும் வேலை வேண்டுமானால் ஈஸியா வாங்கி கொடுக்குறேன்” என்று அமுதாவிடம் கூறியுள்ளார் அஜய்.
ஓஹோ, பெரிய ஆள் தான் போல என நம்பிய அமுதா, தனக்கு வேலை வேண்டும் என்று விசாரிக்க “உங்களுக்கு அதிக சம்பளத்தில் வேலை ரெடியா இருக்கு” என்று கூறி ரூ. 50 ஆயிரத்தை அமுதாவிடம் இருந்து கூகுல் பே மூலம் அஜய் பெற்றுள்ளார்.
சிங்கப்பூர் வேலைக்கு கமிஷன்
பின்னர், அமுதாவின் நண்பர்களுக்கு இந்த செய்தி தெரிய வர, வேலை வேண்டி அவர்களும் மொத்தம் 3 லட்சம் ரூபாய் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளனர்.
வேலை வாங்கி தராமல் இழுத்தடித்த அஜய், அமுதாவையும் மிரட்டியுள்ளார். பின்னர் இது குறித்து குரோம்பேட்டை போலீசாரிடம் அமுதா புகார் செய்தார்.
புகார்
புகாரின்பேரில் அஜய் ரமேஷின் மனைவி பாரதி (26) என்பவரை இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக போலீசார் கைது செய்தனர்.
கூடுதலாக, சிங்கப்பூரில் வேலை செய்யும் அஜய் ராமேசுக்கும் போலீசார் ஸ்கெட்ச் போட்டு தூக்க திட்டமிட்டு வருகின்றனர்.