சிங்கப்பூரில் வேலை செய்யும் கணவர்; சொந்த ஊரில் மனைவி கள்ளக் காதலனுடன் ஓட்டம் – உடைந்து போன ஊழியர்

சிங்கப்பூரில் வேலை செய்யும் கணவர், சொந்த ஊரில் மனைவி செய்த காரியத்தால் ஒட்டுமொத்த குடும்பமும் மனமுடைந்த சோகக் கதை குறித்து காண்போம்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியை சேந்த சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியரின் மனைவிக்கு 40 வயது ஆகிறது. இவர்களுக்கு 22 வயது மற்றும் 21 வயதில் இரண்டு இளம்வயது மகன்கள் உள்ளனர்.

குடும்ப வறுமையை போக்க வேண்டும், தன் மனைவி, மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் வந்துள்ளார்.

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்: பரிசுத் தொகை S$9,830,000 – “நான் சிங்கப்பூரிலேயே தான் பணியாற்றுவேன்” என கூறும் ஊழியர்

மூத்த மகன் என்ஜினீயரிங் முடித்து அதே பகுதியில் வேலை செய்து வருகிறார், மேலும் அவர்களின் இரண்டாம் மகன் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

வீட்டில் கணவன் இல்லை, இரு மகன்களும் காலையிலேயே சென்றுவிடுவார்கள், இந்த தனிமை காலத்தை சமூக வலைத்தளத்தில் அவரின் மனைவி செலவிட்டு வந்துள்ளார்.

இதன் காரணமாக கடலூர் பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நீண்ட நாள் தொடர்ந்த இந்த உரையாடல் நேரடியாக பார்க்க வேண்டும் என முடிவுக்கு வந்துள்ளது.

சொந்த ஊரில் இருந்து அந்த வாலிபர் ஒரத்தநாட்டிற்கு வந்து, வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் மகன்கள் வெளியே செல்லும் நேரம் இவர்களும் யாருக்கும் தெரியாமல் சந்தித்து வந்துள்ளனர். கணவர் சிங்கப்பூரில் இருந்ததும், மகன்கள் இருவரும் வீட்டில் இல்லாததும் அவர்களுக்கு மிகுந்த சவுகரியமாக அமைந்தது.

நீண்ட நாள் சந்திப்பு காரணமாக பெண் வயிற்றில் குழந்தை வளர தொடங்கியது. இதனையே அடுத்து தன் கள்ள காதலன் உடனே சென்று குடும்பம் நடத்த அந்த பெண் முடிவு செய்துள்ளார்.

தனது கணவர் வெயில், மழை பாராது வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி அனுப்பிய பணம், நகையெல்லாம் சுருட்டிக்கொண்டு கடந்த 12ம் தேதி அதிகாலை வீட்டை விட்டு ஓடிப்போனார் அந்த பெண்.

பின்னர் அம்மாவை பணம் நகையுடன் காணோம் என்று அவரின் மூத்த மகன் ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடலூரில் இருவருக்கும் கோவிலில் வைத்து திருமணம் நடந்ததாகவும், திருமண புகைப்படங்கள் மற்றும் அதனுடன் சேர்த்து ஒரு ஆடியோ பதிவையும் சிங்கப்பூரில் உள்ள முதல் கணவருக்கு அவர் வாட்ஸ்-அப் செய்துள்ளார்.

அதில், அந்த காதலனை திருமணம் செய்து கொண்டதாகவும், 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் அவருடனே வாழப்போவதாகவும் அவர் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஒரு மனிதன் படக்கூடாத கஷ்டங்களை சந்தித்து, தன் மனைவி நல்ல இருக்க வேண்டும் என பாடுபட்ட ஊழியருக்கு அந்த பெண் செய்த துரோகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் வேலையின்போது சாக் அடித்து ஊழியர் இறப்பு… முழுக்க முழுக்க முதலாளி தான் பொறுப்பு

Related Articles

Back to top button