சிங்கப்பூரில் வேலை செய்து வரும் ஊழியர் வீட்டில் 25 பவுன் கொள்ளை; ஒரு வருடத்திற்கு பின் 4 பேர் கைது

சிங்கப்பூரில் வேலை செய்து வரும் ஊழியரின் வீட்டில் கொள்ளை போன 25 பவுன் நகை தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி அருகே கொடுவிலார்பட்டியை பகுதியை சேர்ந்தவர் சுந்தர் பிரசாத் என்ற ஊழியர் இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி 29 வயதான ஹேமா. இவர் குடும்பத்துடன் போடி கிருஷ்ணாநகரில் வசிக்கிறார்.
சிங்கப்பூரில் வேலை செய்யும் கணவர்; சொந்த ஊரில் மனைவி கள்ளக் காதலனுடன் ஓட்டம் – உடைந்து போன ஊழியர்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுந்தர் பிரசாத் தாயார் கொடுவிலார்பட்டியில் இறந்துவிட, ஹேமா வீட்டை பூட்டைவிட்டு அங்கு சென்றுள்ளார்.
ஒருவாரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது வீட்டின் கதவு உடைந்து அவர்களின் பீரோவில் வைத்திருந்த 25½ பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
இதனை அடுத்து ஹேமா போடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் இது பற்றிய விசாரணை நடத்தினர்.
சிங்கப்பூரில் வேலையின்போது சாக் அடித்து ஊழியர் இறப்பு… முழுக்க முழுக்க முதலாளி தான் பொறுப்பு
குற்றவாளிகளை தீவீரமாக தேடிவந்த துணை போலீஸ் சூப்பிரண்ட் இத்ரிஸ்கான் தலைமையிலான போலீஸ் படை 4 பேரை கைது செய்துள்ளனர்.
அவர்கள் ஜேசு அருள், பாலகுருசாமி, செந்தில்குமார், தமிழ்செல்வன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 7 பவுன் நகைகளை அவர்களிடம் இருந்து போலீசார் மீட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் ராஜேஷ்கண்ணா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.