சிங்கப்பூரில் வேலைபார்க்கும் ஊழியர்… “கஷ்டப்பட்டு சம்பாதிச்சது போச்சு” – மனைவியிடம் கைவரிசை காட்டிய மர்ம கும்பல்

சிங்கப்பூரில் வேலை செய்து வரும் 40 வயதான தமிழக ஊழியர் தேவராஜ். இவருக்கு திருமணமாகி 34 வயதில் தேன்மொழி என்ற மனைவி உள்ளார்.
தேவராஜ் திருப்பத்தூர் நாட்டறம்பள்ளி, கத்தாரி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர். இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் நிலையில், இவரின் மனைவி அவர்களின் வந்த ஊரில் உள்ளார்.
இந்நிலையில், அப்பகுதி அருகே மொபெட் வண்டியில் கடந்த புதன்கிழமை தனது 5 வயது குழந்தையுடன் சென்ற தேன்மொழியை வழிமறித்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரிடம் இருந்து 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.
அதில் தேன்மொழி அணிந்திருந்த 5 பவுன் மதிப்பு கொண்ட தாலிச் சரடு, மேலும் கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் செயின் ஆகியவற்றை அந்த மர்ம கும்பல் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இது பற்றி தேன்மொழி போலீசிடம் புகார் அளித்துள்ளார், அதன் பேரில் 3 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நம் ஊழியர் சிங்கப்பூரில் வெயில், மழை பாராது கஷ்டப்பட்டு சம்பாதித்த நகைகள் பறிபோனது பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
நகைகள் கிடைக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என “தமிழ் டெய்லி சிங்கப்பூர்” தளம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.