சிங்கப்பூரில் வேலை பார்க்கும் கணவர்; வீடியோ கால் விபரீதம்… உயிரை மாய்துகொண்ட மனைவி

சிங்கப்பூரில் வேலை பார்த்து வருபவர் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஊழியர் செந்தில். இவர் ஞானபாக்கியபாய் (வயது 33) என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
சிங்கப்பூரில் இருந்து கணவருடன் வீடியோ கால் மூலம் பேசும்போது இருவருக்கும் சண்டை வந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் காணாமல் போன நபர் – ஆற்றில் சடலமாக மிதந்தார்: செய்தி அறிந்து கதறும் குடும்பம்
இதில் மனம் வெறுத்துப்போன மனைவி, தன் இரு குழந்தைகளை தூங்க வைத்து பின்னர் தன் வீட்டின் உள்ளேயே தூக்கிலிட்டு உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
பின்னர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சடலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சாதாரண வீடியோ கால் சண்டை மரணம் வரை கொண்டு சென்றது நம் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் நடந்து இரு வாரங்கள் கடந்து விட்டன. சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நல்லகுணம் நல்வார்த்தையாக பேசி பழகுங்கள்.
நமக்கு ஆயிரம் டென்ஸன் இருந்தாலும் சரி… “நமக்கு உறவுகள் மிக முக்கியம்” என்பதை மனதில் பதியவைத்து கொள்ளுங்கள்.