சிங்கப்பூரில் வேலை செய்து வரும் மகன்.. சொந்த ஊரில் தந்தை தூக்கு போட்டு சாவு – என்ன நடந்தது?

சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் ரமேஷ் என்ற ஊழியர் புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே மணவெளி மாஞ்சாலை ரோடு பகுதியை சேர்ந்தவர்.

இவரின் தந்தை 60 வயதான எலெக்ட்ரிஷியன் ராஜேந்திரன், சமீபத்தில் விபத்தில் சிக்கியதில் இவருக்கு தோள்பட்டை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்: பரிசுத் தொகை S$9,830,000 – “நான் சிங்கப்பூரிலேயே தான் பணியாற்றுவேன்” என கூறும் ஊழியர்

இந்நிலையில் அதற்கான சிகிச்சை பார்த்து அவர் வந்துள்ளார். இருப்பினும் அவரின் காலில் எரிச்சல் ஏற்பட்டு அதனால் அவருக்கு வலி ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் அந்த வலி அதிகரிக்க அவரால் பொறுத்துக்கொள்ள முடியாத நிலை இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வேலையின்போது சாக் அடித்து ஊழியர் இறப்பு… முழுக்க முழுக்க முதலாளி தான் பொறுப்பு

இந்த நிலையில் அவரின் மனைவி வெளியில் வேலைக்கு சென்றுள்ளார். மனைவியின் போன் அழைப்பை ராஜேந்திரன் எடுக்காததால் சந்தேகம் அடைந்த மனைவி, பக்கத்துக்கு பகுதியில் கணவன் வீட்டில் இருந்த தனது மகளை வந்து பார்க்க சொல்லியுள்ளார்.

அவர் வந்து பார்த்தபோது அறை பூட்டி இருந்தது, இதனை அடுத்து ஜன்னல் வழியே பார்த்தபோது ராஜேந்திரன் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்தது.

சிங்கப்பூரில் பணிபுரியும் அவரின் மகனுக்கு இந்த தகவல் கொடுக்கப்பட்டது, இதை அறிந்த அவர் அதிர்ச்சியில் உடைந்துபோனதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வேலை செய்யும் கணவர்; சொந்த ஊரில் மனைவி கள்ளக் காதலனுடன் ஓட்டம் – உடைந்து போன ஊழியர்

Related Articles

Back to top button