சிங்கப்பூரில் வேலைபார்க்கும் புதுக்கோட்டை ஊழியர்… ஓடாய் தேய்ந்து உழைத்த 1½ லட்சம் பறிபோன சோகம் – எச்சரிக்கை

சிங்கப்பூரில் வேலைபார்க்கும் ஊழியர் செபஸ்டியன் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர். இவரின் மனைவி சுதா (வயது 41).
இந்நிலையில், புதுக்கோட்டையில் வங்கியில் ரூ.1½ லட்சம் எடுத்துவிட்டு சுதா கடைவீதிக்கு தன்னுடைய ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.
சிங்கப்பூரில் புதிய Work pass… மாத சம்பளம் மிக அதிகம்; வாயை பிளக்க வைக்கும் சிங்கை அரசின் திட்டம்
பின்னர் அதிலிருந்து ரூ.13 ஆயிரம் மட்டும் கடைக்கு எடுத்து கொண்டு மீதமுள்ள ரூ.1 .37 லட்சத்தை ஸ்கூட்டர் உள்ளே வைத்துவிட்டு கடைக்கு சென்றுள்ளார் அவர்.
திரும்பி வந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது, ஸ்கூட்டர் உள்ளே வைத்த ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்தை மர்ம கும்பல் திருடியது தெரியவந்தது.
அதனை அடுத்து இது குறித்து அவர் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பின்னர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர்.
இதில் 2 பேர், ஸ்கூட்டரில் இருந்து பணத்தை திருடுவதும், இருவரும் பின்னர் மோட்டார் வண்டியில் ஏறிச்செல்வதும் பதிவாகியுள்ளது.
அந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து சம்பாதிக்கும் பணத்தை நாம் தான் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
சிங்கப்பூர் (மட்டும்) தொடர்பான வேலைவாய்ப்புகளை பெற டெலெக்ராம் –
https://t.me/tamildailysg
சிங்கப்பூரில் வேலைசெய்த ஊழியர்… தன் தந்தையை கட்டையால் அடித்து கொன்ற கொடூரம்