பெண்ணை ஏமாற்றி சிங்கப்பூர் ஓடிவந்த ஊழியர்… சென்னை விமான நிலையத்தில் அலேக்கா தூக்கிய போலீஸ் – சிறையில் வைத்தே திருமணம்!

பெண்ணை திருமணம் செய்ய மறுத்து சிங்கப்பூர் சென்ற ஊழியரை கைது செய்து போலீஸ் அதிரடி காட்டியுள்ளது.

மதுரை பகுதியை சேர்ந்த 27 வயதான அழகுராஜா என்பவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் ஊழியர். அதே மதுரை பகுதியை சேர்ந்த மலைச்சாமி என்பவரின் மகள் 22 வயதான ரம்யா.

MRT ரயிலில் பெண் பயணி செய்த காரியம்; “என்னாச்சு இவர்களுக்கு” – எழுந்து ஓடிய பயணிகள்: Video Viral

இருவருக்கும் காதல் இருந்துள்ளது. அதே போல இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். அதன் பின்னர், அவர் அழகுராஜா சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு சொந்த ஊருக்கு திரும்பிய அவரை மாப்பிள்ளை கேட்டு ரம்யா அவரின் பாட்டியுடன் சென்றுள்ளார்.

ஆனால், இதை மறுத்து மாப்பிள்ளை தரப்பில் தகராறில் ஈடுப்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து விரக்தியடைந்த ரம்யா போலீசில் புகார் கொடுக்க, போலீஸ் அவரை அலேக்கா தூக்கி சிறையில் தள்ளியது.

சிங்கப்பூரில் புதிய வெளிநாட்டு ஊழியர்களை நிறுவனங்கள் வேலைக்கு எடுக்க முடியாது… இந்த தவறை செய்ய வேண்டாம் – MOM கடும் எச்சரிக்கை

அப்பறம் என்ன ஆச்சு, வழக்கம் போல ஜாமினில் வந்த அழகு சிங்கப்பூருக்கு ஓடிப்போக, தமிழ்நாடு போலீசார் விமான நிலையங்களில் லுக்அவுட் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

கடந்த மாதம் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு ரிலாக்ஸாக வந்த அழகுராஜா குறித்து தகவல் அறிந்த போலீஸ் மீண்டும் தூக்கி அவரை சிறையில் போட்டது.

பின்னர், மேலூர் சிறையில் வைத்தே அவருக்கும் ரம்யாக்கும் திருமணம் நடந்தது. நூறாண்டு காலம் வாழ்க…

Source: Daily Thanthi 

சிங்கப்பூரில் குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு இனி நிம்மதி.. செப். 1 முதல் எல்லாமே மாறும்

Related Articles

Back to top button