சிங்கப்பூரில் வேலைக்கு முயற்சித்த கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தற்கொலை; கணவன் கைது!

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் சிங்கித்துறை வடக்கு காலனியைச் சேர்ந்தவர் இருதயசாமி மகள் பிக்சியா (19), இவருக்கும் தூத்துக்குடி போல்ராயப்புரத்தை சேர்ந்த தங்கையா மகன் மரியஜோஸ் பரத் என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது.

இரு வீட்டு பெற்றோரும் பேசி தம்பதியினரை ஏற்றுக்கொண்டனர். மரியஜோஸ்வும், பிக்சியாவும் இருதயசாமியின் தம்பி ஜெகதீஸ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தனர்.

சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியருக்கு திருமணம் செய்யப்பட இருந்த பெண்… வீடியோ எடுத்து மிரட்டல் – தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்

மரியஜோஸ் கேரளாவில் பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையில் அவர் சிங்கப்பூரில் வேலைக்கு முயற்சி செய்து வந்தது தொடர்பாக கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனிடையே, மனம் உடைந்த பிக்சியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், மரியஜோஸை கைது செய்ய வலியுறுத்தி சிங்கித்துறை பகுதி மக்கள் காவல்நிலையத்தை கடந்த திங்கள்கிழமை அன்று முற்றுகையிட்டனர்.

பின்னர், மரியஜோஸ் மீது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singapore-வுடன் இணைந்து இருங்கள்!

Tamil Daily Singapore Telegram: https://t.me/tamildailysg

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் இருவர் சம்பவ இடத்திலேயே பலி – துவாஸில் நடந்த கொடூர சம்பவம்

Related Articles

Back to top button