சிங்கப்பூரில் வேலைசெய்த ஊழியர்… தன் தந்தையை கட்டையால் அடித்து கொன்ற கொடூரம்

சிங்கப்பூரில் பணிபுரிந்த தமிழ்நாட்டை சேர்ந்த ஊழியர் தன் தந்தையை கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர் குமரேசன். இவர் கடந்த 5 வருடங்களாக சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார்.

சிங்கப்பூரில் தமிழக ஊழியர் தற்கொலை – தமிழ்நாட்டில் பெண் மர்ம சாவு… சில மணிநேரங்களில் நடந்த கொடூரம்

இவரின் தந்தை ரவி (58), குமரேசனுக்கு திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு சொந்தமாக மாடி வீடு மற்றும் ஒரு குடிசை வீடும் இருக்கிறது.

குமரேசனின் மனைவிக்கும் அவரின் அப்பா, அம்மாக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒருநாள் இந்த சண்டை வீரியமடைய, “எங்களுக்கு மாடிவீட்டில் ஒரு அறையை கொடுத்து விடுங்க நாங்க இருந்துக்குறோம்” என ரவி கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் வேலைபார்க்கும் ஊழியர்… “கஷ்டப்பட்டு சம்பாதிச்சது போச்சு” – மனைவியிடம் கைவரிசை காட்டிய மர்ம கும்பல்

இதில் மகனுக்கும், அப்பாக்கும் வாய் தகராறு அதிகரிக்க ஆத்திரமடைந்த குமரேசன், அருகில் இருந்த மண்வெட்டி கட்டையை எடுத்து ரவியை கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதில் ரவிக்கு பலத்த காயம் ஏற்பட, இரத்த வெள்ளத்தில் ரவி அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதனை அடுத்து குமரேசன் தன் மனைவியுடன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

போலீசார் பிரேதத்தை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மகனே தந்தையை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு: வீட்டில் பணிபுரிய கிளாஸ் 3 உரிமம் கொண்ட டிரைவர்கள் தேவை – சம்பளம் S$3,500

சிங்கப்பூர் (மட்டும்) தொடர்பான வேலைவாய்ப்புகளை பெற டெலெக்ராம் –
https://t.me/tamildailysg

 

Related Articles

Back to top button