சிங்கப்பூர் இந்திய தூதரகத்தில், இந்திய பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வழிமுறைகள்!

உங்களுடைய பாஸ்போர்ட் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை, தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்ப மையங்களில் ஏதேனும் ஒன்றில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
பாஸ்போர்ட் விண்ணப்ப மையங்களில் இந்த விண்ணப்பத்திற்கு சிங்கப்பூர் சேவை கட்டணமாக S$10.80 செலுத்த வேண்டும்.
பாஸ்போர்ட் புதுப்பித்தல் விண்ணப்ப படிவத்தை, www.hcisingapore.gov.in என்னும் இணைய முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் அல்லது தூதரகம் அல்லது பாஸ்போர்ட் விண்ணப்ப மையங்களிலிருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
உங்கள் பாஸ்போர்ட் விண்ணப்பம் தொடர்பான கூடுதல் தகவலுக்கு, Attache (Passport) at [email protected] முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
தேவையான ஆவணங்கள்:
பாஸ்போர்ட் புதுப்பித்தல் விண்ணப்ப படிவத்தை (அடையாளம் / புகைப்படம் சரிபார்க்கப்பட வேண்டும்) சமர்ப்பிக்க விண்ணப்பதாரர் நேரில் வர வேண்டும்:
- தற்போதுள்ள (காலாவதியான) இந்திய பாஸ்போர்ட்
- சமீபத்திய வண்ண புகைப்படம் அளவு 2 inch X 2 inch (5.1 X 5.1 cm) வெள்ளை பின்னணியுடன், கடந்த 6 மாதங்களுக்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்
- அடையாள அட்டை (NRIC / EP / SP / DP / WP) மற்றும் இந்த ஆவணங்களின் நகல்கள்
- சிறார்களின் பாஸ்போர்ட்களை புதுப்பிக்க, பெற்றோரின் பாஸ்போர்ட்களின் நகல்களும் சமர்ப்பிக்கப்படலாம்.
கட்டணம்:
சாதாரண பாஸ்போர்ட்டிற்கு (36 பக்கங்கள்) S$100.00 (15 வயதுக்குக் குறைவான சிறார்களுக்கு S$65).
ஜம்போ பாஸ்போர்ட்டிற்கு S$130.00 (60 பக்கங்கள்) ரொக்கமாக செலுத்தப்பட வேண்டும்.
இயங்கும் நேரம்:
பொதுவாக 5 முதல் 8 வேலை நாட்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய இடம்:
அங்கீகரிக்கப்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்ப மையங்கள்.
பாஸ்போர்ட் வழங்குவதற்கும் புதுப்பிப்பதற்கும் அவசர சேவைகள் (தட்கல் சேவா):
விண்ணப்பதாரருக்கு எதிராக எந்த தடையும் இல்லை என்னும் பட்சத்தில், உண்மையாக அவசரம் ஏற்பட்டால், அடுத்த நாள் பாஸ்போர்ட் வழங்க இந்த சேவை வழிவகை செய்கிறது.
கட்டணம்:
- சாதாரண பாஸ்போர்ட்டுக்கு S$285.00
- 18 வயதை அடையாதவர்களுக்கு S$255
- ஜம்போ பாஸ்போர்ட்டுக்கு S$320 ரொக்கமாக செலுத்தப்படவேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய இடம்:
அங்கீகரிக்கப்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்ப மையங்கள்.