சிங்கப்பூரில் வாரத்தில் 4 நாள் வேலை; ஊழியர்கள் மிகுந்த ஆர்வம் – நிறுவனங்கள் தயாரா?

சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாள் வேலை முறைக்கு செல்ல மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.
இங்குள்ள 1,000 ஊழியர்களிடம் நடத்திய ஆய்வில், 81 சதவீதம் பேர் தங்களுக்கு வாரத்தில் நான்கு நாள் வேலை முறை வேண்டும் என்று பதில் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: வெளிநாட்டு ஊழியர்களே உஷார் – சிக்கிய பல்வேறு நாடுகளை சேர்ந்த 24 ஊழியர்கள்: சிங்கப்பூரில் இந்த தப்பை செய்யாதீங்க!
அதிலும் குறிப்பாக 37 சதவீதம் பேர் அந்த முறை வேண்டும் என மிகுந்த ஆர்வத்துடன் பதில் கூறியுள்ளனர்.
வாரத்தில் நான்கு நாள் வேலையை விரும்புபவர்களில் பெரும்பான்மையானவர்கள் (78 சதவீதம்) வேலை-வாழ்க்கை சமநிலையை அதி முக்கிய நன்மையாகக் கருதுகின்றனர்.
தற்போது சிங்கப்பூரில் இந்த வேலை அணுகுமுறையை சில நிறுவனங்கள் வழங்குகின்றன.
ஜாப்ஸ்ட்ரீட் என்னும் வேலைவாய்ப்பு தரவுகளின் அடிப்படையில், 1 சதவீதத்திற்கும் குறைவான நிறுவனங்கள் இந்த வாரத்துக்கு 4 நாள் வேலைகளை வழங்குகின்றன.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை செய்யும் கணவர்; மனைவி கழுத்தில் 5 பவுன் சங்கிலி பறிப்பு – பட்டப்பகலில் மர்ம கும்பல் துணிகரம்
இதில், பாதிக்கும் அதிகமானோர் (55 சதவீதம்) இந்த அணுகுமுறை நிறுவனங்கள் ஏற்காது என்று “NO” கூறியுள்ளனர். வெறும் 10 சதவீதம் மட்டுமே “YES” கூறியுள்ளனர்.
“எல்லா பிஸினஸுக்கும் இது செட் ஆகாது” என்று 35 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
சிங்கப்பூரில் வாரத்தில் நான்கு நாள் வேலை? – ஊழியர்களுக்கு சம்பளம் குறையுமோ என அச்சம்