சிங்கப்பூரில் ஊழியர்களை தூங்க விடாமல் தொல்லைதரும் “மூட்டை பூச்சி” – மன அழுத்தம், ஆன்சிட்டி ஏற்படும் அபாயம்!

சிங்கப்பூரில் ஊழியர்கள் தூக்கத்தை கெடுக்கும் ஒரு பொதுவான தொல்லை “மூட்டை பூச்சி” எனலாம். மூட்டை பூச்சிகள் பொதுவாக பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் தான் அதிக சுறுசுறுப்பாக செயல்படும்.
அதனை ஒரே அடியாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்று ஊழியர்கள் புலம்புவதை நம்மால் பார்க்க முடிந்தது.
அந்த பூச்சிகளை பூச்சி ஒழிப்பு நிபுணர்களை கொண்டு ஒளித்து கட்டலாம். அப்படி முடியாத பட்சத்தில் பாதுகாப்புடன் மூட்டை பூச்சி மருந்து வாங்கி அடிக்கலாம்.
சிங்கப்பூரில் வேலை பார்க்கும் ஊழியர்; தமிழ்நாட்டில் உள்ள அவரின் வீட்டில் நடந்த கொடூரம் – உஷார்
120 டிகிரி பாரன்ஹைடில் சூட்டை மூட்டை பூச்சியால் தாங்கிக்கொள்ள முடியாமல் இறந்து விடும். எனவே, 120 டிகிரி பாரன்ஹைடு வெப்ப நீரில் மூட்டை பூச்சி இருக்கும் பொருட்களை சுத்தம் செய்யலாம்.
மேலும் துணிகளை 30 நிமிடங்கள் மேற்கண்ட சூடான நீரில் போட்டு சுத்தம் செய்தால் மூட்டை பூச்சியை அழித்துவிடலாம்.
இல்லை எனில், பொருட்களை கருப்பு பிளாஸ்டிக் பை போட்டு நல்ல வெயிலில் வைத்தால் மூட்டை பூச்சி ஒழிய அதிக வாய்ப்பு உள்ளது. குளிர்விக்கப்பட்ட வேப்பெண்ணெய் கூட பூச்சி விரட்டியாக பயன்படுகிறது.
எலும்பிச்சை, யூகாப்லிப்ட்ஸ் எண்ணெய் போன்றவற்றை கூட நாம் பூச்சி விரட்டும் பொருட்களான பயன்படுத்தலாம்.
ஆடைகளை சுத்தமாக துவைத்து நல்ல வெயிலில் காயவைத்து பிறகு அணியுங்கள். கூடுதலாக தலையணை உறைகள், மெத்தைகள் எல்லாவற்றையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
குறிப்பாக உங்களின் விடுதி அறை சுவற்றில் உள்ள விரிசல்கள், இடுக்குகள், பொந்துகள் ஏதும் இருந்தால் அதனை அடைத்து விடுங்கள்.
மூட்டை பூச்சி கடி இருந்தால் தூக்கமின்மை, மன அழுத்தம், ஆன்சிட்டி போன்றவை ஏற்படலாம்.
எனவே படுக்கை அறையை சுத்தமாக வைக்க முயற்சி செய்யுங்கள். மூட்டை பூச்சிக்கு நிரந்தர தீர்வு காண அதை உடனடியாக விரட்ட முற்பட வேண்டும்.
இந்தியர் விபத்தில் பலி – பரிதவிக்கும் குடும்பம்; சிங்கப்பூரில் மரணம் புரியாத புதிர்