சிங்கப்பூரில் Work permit வேலை வேண்டுமா…வேலையை எப்படி பெறுவது..? ஊழியர்கள் செய்ய கூடாதது என்ன? – Complete Report

Singapore Work Permit: சிங்கப்பூரில் Work permit வேலை பெற விரும்பும் இந்திய ஊழியர்கள் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியவை பற்றி பார்ப்போம்.
உங்களால் சிங்கப்பூரில் Work permit வேலை பெற விசாவுக்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மற்ற நாடுகளில் நாம் நேரடியாக கூட விண்ணப்பிக்க முடியும். ஆனால், சிங்கப்பூரில் உள்ள நிறுவனம் மூலமாக மட்டுமே நம்மால் விசா விண்ணப்பிக்க முடியும். அதற்கு சிங்கப்பூர் அரசாங்கம் ஒப்புதல் அளித்த பிறகே நம்மால் அங்கு சென்று பணியாற்ற முடியும்.
சிங்கப்பூர் ஒர்க் பெர்மிட் – Work Permit
சிங்கப்பூரில் குறிப்பிட்ட சில அனுமதி பாஸ்களுக்கு கீழ் தான் உங்களால் வேலை செய்ய முடியும். அதற்காகவென்று தனியாக விசா ஏதும் இல்லை. அதில் ஒன்று ஒர்க் பெர்மிட் (Work permit) அனுமதி.
உங்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனம் Work permit சம்பளம், வைப்பு தொகை, மருத்துவக் காப்பீடு ஆகிய முழு விவரங்களையும் அரசாங்கத்திடம் அளித்து அனுமதி பெறும்.
Work permit தேவையான ஆவணங்கள்:
- குறைந்தது உங்களுக்கு 18 வயது பூர்த்தி பெற்றிருக்க வேண்டும்
- பொதுவான நடைமுறையாக தகுதி வாய்ந்த பாஸ்போர்ட் அவசியம்
- Work permit-டில் குறிப்பிடப்பட்ட வேலை மற்றும் அதற்கான தகுதி அவசியம்
- உங்களுக்கு அனுமதியில் வழங்கப்பட்ட வேலையை மட்டுமே செய்ய வேண்டும்
வெளிநாட்டு ஊழியர்கள் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்
உங்களை Work Permitடில் வேலைக்கு எடுத்த நிறுவனத்துக்காக மட்டுமே பணியாற்ற வேண்டும்.
உங்களுக்கான வேலையை விட்டு வேறு வேலையில் ஈடுபடுவது அல்லது சொந்த தொழில் தொடங்குவதோ கண்டிப்பாக கூடாது.
சிங்கப்பூர் பெண்களை, PR நிரந்தர வாசிகளை Miniistry of Manpower அமைச்சகம் அனுமதி இல்லாமல் திருமணம் செய்யக் கூடாது.
நிறுவனம் உங்களுக்கு தங்க அனுமதித்த இதில் மட்டுமே தங்க வேண்டும்.
ஒரிஜினல் Work Permit அட்டையை உடன் வைத்திருப்பது நல்லது.
சிங்கப்பூர் (மட்டும்) தொடர்பான வேலைவாய்ப்புகளை பெற டெலெக்ராம் –
https://t.me/tamildailysg