Singapore Jobs: இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள ஓட்டுனர்கள் சிங்கப்பூரில் வேலை பார்க்க முடியுமா என்று பலர் நம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர்.
அது பற்றி நாம் இணையத்தில் உளவியபோது இந்திய Heavy ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் சிங்கப்பூரில் ஓட்டுநராக பணியாற்ற முடியும் என்ற தகவல் கிடைத்தது.
PSA Singapore என்பது சிங்கப்பூரில் மிகப்பெரிய துறைமுக டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ஆகும், அந்நிறுவனத்தில் இந்திய Heavy ஓட்டுநர் உரிமம் உடைய ஊழியர்கள் பணியாற்ற முடியும் என கூறப்பட்டுள்ளது.
அதாவது Heavy உரிமம் உடையவர்களுக்கு அதன் துறைமுகத்துக்குள் மட்டும் வேலைகள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதான சாலைகளில் அவர்களால் வாகனங்களை ஓட்ட முடியாது.
PSA சிங்கப்பூர் நிறுவனம், பல்வேறு வேலைகளை ஓட்டுநர்களுக்கு வழங்குகிறது, அவற்றில் கண்டெய்னர்களை ஏற்றி இறக்கும் பிரைம் மூவர் ஓட்டுனர்கள் மற்றும் கனரக வாகன (Trailer) ஓட்டுனர்கள் வேலைகளும் அடங்கும்.
சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் – மீறினால் சிறை
வேலையைப் பொறுத்து குறிப்பிட்ட தேவைகள் (requirements) மாறுபடலாம், ஆனால் பொதுவாக முறையான Heavy ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுபவம் தேவைப்படும்.
மேலும், ஓட்டுனர்களின் சம்பளத்தை பொறுத்தவரை S$1000 முதல் S$1300 வரை கிடைக்கும் என கூறப்படுகிறது.
இதற்கான நேர்காணல் (Interview) இந்தியாவில் தமிழ்நாட்டிலும் நடைபெறும் என சொல்லப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் பெற எங்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருங்கள்
வெளிநாட்டு ஊழியர்களே சம்பளம் சரியாக வரவில்லையா? – உங்களுக்கான ஒரே தீர்வு