தமிழ்நாட்டை சேர்ந்தவர் சிங்கப்பூரில் அமைத்த “சின்ன அம்மன்” இன்று பழமையான “மகா மாரியம்மன் கோவில்” – சிங்கப்பூரை கட்டிக்காத்த தமிழர்கள்!

சிங்கப்பூரின் மிகப் பழமையான “மகா மாரியம்மன் கோயில்” சைனாடவுன் வட்டாரத்தில் சவுத் பிரிட்ச் சாலையில் அமைந்துள்ளது

இது 1827ஆம் ஆண்டு, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட தமிழ் மக்களின் உறுதுணையோடு அமைக்கப்பட்டது.

சிங்கப்பூர் முதலாளி செட்டில்மென்ட் செய்த 3 லட்சம் சம்பள பாக்கி: போதையில் போட்டு சென்ற ஊழியர் – தமிழக போலீசிடம் நேர்மையாக ஒப்படைத்த மூதாட்டி!

நாராயண பிள்ளை

நாராயண பிள்ளை என்பவர் தான் அந்த கோயில் முதலில் உருவாகவும், தோற்றம் பெறவும் காரண கர்த்தாவாக இருந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

மாரியம்மன் முன் முதற் கடவுளாகவும், மூலஸ்தான தெய்வமாகவும் அக்கோவிலில் அமையப்பெற்று இருப்பது சிறப்பு.

கோவில் நிலம்

முதன்முதலாக 1822ல் கிழக்கிந்திய கம்பெனி அந்த கோவில் அமைக்க நிலத்தை வழங்கியது. பின்னர் அடுத்த ஆண்டு 1823ல் தற்போது மாரியம்மன் கோவில் அமைந்துள்ள சவுத் பிரிட்ஜ் சாலையில் கோவில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

கோவிலின் கட்டுமான அடித்தளப்பணிகள் 1827ஆம் ஆரம்பிக்கப்பட்டது.

சின்ன அம்மன்

கடலூரைச் சேர்ந்த நபர், அம்மன் சிலையை மரப்பலகை, கூரையுடன் கூடிய சிறுகுடில் போன்று அமைத்து கொடுக்க, “சின்ன அம்மன்” என்ற பெயரில் அங்கு வழிபாடு தொடங்கப்பட்டது.

பிற்காலத்தில் அந்த அம்மனே இன்று “மகா மாரியம்மன்” ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இருக்கிறது.

செங்கல் கட்டிடம்

அதன் பின்னர் சுமார் 16 ஆண்டுகள் கழித்து 1862ல் கோயில் முழுமையான செங்கல் கட்டிடமாக மாற்றப்பட்டது.

கும்பாபிஷேகம்

கோவிலில் முதல் கும்பாபிஷேகம் 1936ல் நடைபெற்றது. குடமுழுக்குகள் 1949, 1977, 1984, 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றன.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சொன்ன சம்பளம் வரவில்லையா? வேலையை விட்டு தூக்கிட்டாங்களா? – MOM அறிக்கை

Related Articles

Back to top button