சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்கள், Long-term, Short-term பயணிகள், தடுப்பூசி போடாதோருக்கு முக்கிய அறிவிப்பு!

சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இனி நுழைவு அனுமதி தேவையில்லை
சிங்கப்பூருக்கு வரும் 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நீண்ட கால அனுமதி உடையோர் (long-term pass holders) மற்றும் குறுகிய கால வருகையாளர்கள் (short-term visitors) இனி நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.
இது வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) முதல் நடப்புக்கு வருமென சுகாதார அமைச்சகம் (MOH) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
தனிமை, PCR இல்லை
மேலும், அவர்கள் 7-நாள் SHN தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டிய அவசியமில்லை.
அதே போல SHN தனிமைக்காலத்தின் முடிவில் PCR சோதனையும் இனி செய்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.
முழுமையாக தடுப்பூசி போடாத பயணிகள் கவனத்திற்கு…
எவ்வாறாயினும், முழுமையாக தடுப்பூசி போடாத பயணிகள் சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்குள் தொற்று பாதிப்பு இல்லை என்ற “நெகடிவ் ரிசல்ட்” முடிவை சமர்ப்பிக்க வேண்டும் என்று MOH தெரிவித்துள்ளது.
காப்பீடு கட்டாயம்
முழுமையாக தடுப்பூசி போடாத குறுகிய கால வருகையாளர்கள் சிங்கப்பூரில் தங்கியிருக்கும் காலகட்டத்திற்கு கோவிட்-19 பயணக் காப்பீட்டை கட்டாயமாக வாங்க வேண்டும்.
ஒரு வேலை தொற்று உறுதியானால்?
தொற்று இருப்பது உறுதியானால், பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்.
நெகடிவ் முடிவை உறுதி செய்த பின்னரே பயணத்தைத் தொடர வேண்டும். அதுவும், முதலில் பாசிட்டிவ் முடிவை பெற்ற நேரத்தில் இருந்து குறைந்தது 72 மணிநேரத்துக்கு பின்னரே அவ்வாறு செய்ய முடியும்.
மேலும் இது போன்ற Update-களை பெற இணைந்து இருங்கள் தமிழ் டெய்லி சிங்கப்பூருடன்…