சிங்கப்பூரில் Work permit உடைய ஊழியர்களுக்கு என்ன தளர்வுகள்? – நுழைவு அனுமதி தேவையா?

சிங்கப்பூரில் Work permit உடைய ஊழியர்களுக்கு எந்த தளர்வுகளும் இன்று வெளியாகவில்லை. எனவே பழைய நடைமுறையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CMP Work permit ஊழியர்கள் இரண்டு பாதைகள் வழி உள்ளே வருகின்றனர்.

  • முதலாவது துறைசார்ந்த பயண முறை
  • இரண்டாவது Work Pass Holder General Lane

புதிய PDPP நடைமுறை என்ன என்பதை பார்ப்போம்:

(13 மார்ச் முதல் ஏப்ரல் 30 வரை மட்டும்)

அனைத்து ஊழியர்களும் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பது பொது நடைமுறை.

துறைசார்ந்த பயண முறையில், ஊழியர்கள் சொந்த நாட்டில் புறப்படுவதற்கு முன்னர் அங்கு நிர்ணயிக்கப்பட்ட இட வசதியில் இரண்டு நாள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த திட்டத்தை PDPP என கூறுகின்றனர்.

ஊழியர்கள் சொந்த நாட்டில் இருந்து புறப்படும் முன்னர் கோவிட் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

சிங்கப்பூர் வந்த பின்னர் 3 நாள் தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.

Work Pass Holder General Lane

அதே போல, Work Pass Holder General Lane வழியாகவும் வரலாம்.

இதில் 7 நாள் தனிமை, MOM onboarding நிலையங்களில் இரண்டு நாள் Program இருக்கும்.

மே 1 முதல்…

ஏப்ரல் முடிந்த பின்னர் மே 1 முதல், மேற்கண்ட துறைகளுக்கு புதிதாக வரும் Work permit ஊழியர்கள், “துறைசார்ந்த பயண முறை – PDPP பாதை” வழியாக மட்டுமே வர முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

IPA வைத்திருக்கும் புதிய CMP Work permit ஊழியர்களும் மே 1 முதல் Work Pass Holder General Lane வழியாக வர முடியாது. PDPP பாதை” வழியாக மட்டுமே வர முடியும்.

மற்ற CMP Work permit ஊழியர்கள் Work Pass Holder General Lane வழியாக வரலாம் என கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான கோவிட்-19 விதிகள் தளர்வு – Detailed Report

JUSTIN: முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் ஏப்ரல் 1 முதல் ஈஸியா சிங்கப்பூருக்குள் வரலாம் – செம்ம அறிவிப்பு!

Related Articles

Back to top button