இந்தியாவின் UPI – சிங்கப்பூரில் Pay Now இணைப்பு: அடடா இவ்வளவு நன்மையா? எப்படி பணத்தை அனுப்புவது?

இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரில் Pay Now ஆகியவற்றை இணைக்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதனை இந்திய நாட்டு பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்தியாவுக்கு மொபைல் மூலமாக இலகுவாக பணம் அனுப்பலாம்

இதன் மூலமாக வெறும் மொபைல் போனை வைத்து வெளிநாட்டு ஊழியர்கள் இந்தியாவுக்கு இலகுவாக பணம் அனுப்பமுடியும்.

பொதுவாக வெளிநாடுகளில் இருந்து வங்கிகளின் அந்நிய செலாவணி முறையில் மட்டுமே பணத்தை அனுப்ப முடியும்.

ஆனால், இனி மொபைல் போனை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் நாம் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பலாம்.

எப்படி செயல்படும்?

சிங்கப்பூரில் இருந்து வெள்ளியாக அனுப்பப்படும் பணம், இந்திய வங்கிகளுக்கு செல்லும்போது அது அன்றைய சிங்கப்பூர் டாலர் மதிப்புக்கே பெறுநர் வங்கி கணக்கில் ரூபாயாக வரவு வைக்கப்படும்.

அதே போல, சிங்கப்பூரில் இருந்து இந்திய ரூபாயில் அனுப்பப்படும் பணம் சிங்கப்பூர் வங்கிகளில் டாலராக மாற்றப்பட்டு பெறுநர் வங்கி கணக்கில் டாலராக வரவு வைக்கப்படும்.

சிங்கப்பூர் தமிழக ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

சிங்கப்பூரில் சுமார் 6 .5 லட்சம் இந்தியர்கள் இருப்பதாகவும், அவர்கள் ஆண்டுக்கு 42 ஆயிரம் கோடிக்கு மேல் இந்தியாவுக்கு பணம் அனுப்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது முக்கியமாக சிங்கப்பூர் தமிழக ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button