Work permit, S Pass, தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு அக்டோபர் 1, 2022 முதல் புதிய நடைமுறை!

Work pass Singapore : சிங்கப்பூரின் கோவிட்-19 நெறிமுறைகள் தொடர்பாக தொடர்ச்சியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் Work pass வைத்திருப்பவர்களுக்கான தடுப்பூசி தேவைகளையும் சுகாதார அமைச்சகம் (MOH) அறிவித்துள்ளது.
நீண்ட கால அனுமதி மற்றும் Work pass அனுமதி பெறுவதற்கான அனைத்து புதிய விண்ணப்பங்களுக்கும் அனுமதி நிபந்தனையாக COVID-19 தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற நடைமுறை தொடரும்.
முகக்கவச தளர்வுகள் மற்றும் எல்லை நடவடிக்கைகள் போன்ற தளர்வுகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதையும் Tamil daily Singapore பதிவிட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள Work passes அனுமதி புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கும் தடுப்பூசி கட்டாயம் தேவை என்று கூறப்பட்டுள்ளது.
Training work permit மற்றும் S Pass வைத்திருப்பவர்களுக்கு work permit அனுமதிகளைப் புதுப்பிப்பதற்கும் முழு தடுப்பூசி நிலை தொடர்ந்து தேவைப்படும்.
யாருக்கு பொருந்தும்:
கட்டுமானம், கடல் தளம் மற்றும் செயல்முறைத் துறைகளில் உள்ள ஊழியர்கள் அல்லது தங்கும் விடுதிகளில் வசிப்பவர்களுக்கு பொருந்தும்.
இந்த திருத்தம் செய்யப்பட்ட தடுப்பூசி தொடர்பான நடைமுறைகள் வரும் அக்டோபர் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும்.
சிங்கப்பூரில் தொடரும் ஊழியர் மரணம் – லாரி மோதி பரிதாபமாக பலியான ஊழியர்