“Work Permit” CMP வெளிநாட்டு ஊழியர்கள் இனி இப்படி தான் சிங்கப்பூருக்குள் வர முடியும் – புதிய விதிமுறையின் முழு தொகுப்பு!
கட்டுமானம், கடல் மற்றும் செயல்முறை (CMP) துறை

சிங்கப்பூரில் கட்டுமானம், கடல் மற்றும் செயல்முறை (CMP) துறைகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்குள் வருவதற்கான நடைமுறை தேவைகளை சிங்கை அரசு எளிமைப்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களின் பற்றாக்குறை இதற்கு காரணமாக இருந்து வருகிறது, ஆகையால் அதனை சரிக்கட்டும் வகையில் நுழைவுத் தேவைகளை எளிமைப்படுத்தியுள்ளது சிங்கை.
மேற்கண்ட துறைகளைச் சேர்ந்த CMP Work permit ஊழியர்கள் இரண்டு பாதைகள் வழி உள்ளே வருகின்றனர்.
- முதலாவது துறைசார்ந்த பயண முறை
- இரண்டாவது Work Pass Holder General Lane
புதிய PDPP நடைமுறை என்ன என்பதை பார்ப்போம்:
(13 மார்ச் முதல் ஏப்ரல் 30 வரை மட்டும்)
அனைத்து ஊழியர்களும் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பது பொது நடைமுறை.
துறைசார்ந்த பயண முறையில், ஊழியர்கள் சொந்த நாட்டில் புறப்படுவதற்கு முன்னர் அங்கு நிர்ணயிக்கப்பட்ட இட வசதியில் இரண்டு நாள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த திட்டத்தை PDPP என கூறுகின்றனர்.
ஊழியர்கள் சொந்த நாட்டில் இருந்து புறப்படும் முன்னர் கோவிட் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
சிங்கப்பூர் வந்த பின்னர் 3 நாள் தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.
Work Pass Holder General Lane
அதே போல, Work Pass Holder General Lane வழியாகவும் வரலாம்.
இதில் 7 நாள் தனிமை, MOM onboarding நிலையங்களில் இரண்டு நாள் Program இருக்கும்.
மே 1 முதல்…
ஏப்ரல் முடிந்த பின்னர் மே 1 முதல், மேற்கண்ட துறைகளுக்கு புதிதாக வரும் Work permit ஊழியர்கள், “துறைசார்ந்த பயண முறை – PDPP பாதை” வழியாக மட்டுமே வர முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
IPA வைத்திருக்கும் புதிய CMP Work permit ஊழியர்களும் மே 1 முதல் Work Pass Holder General Lane வழியாக வர முடியாது. PDPP பாதை” வழியாக மட்டுமே வர முடியும்.
மற்ற CMP Work permit ஊழியர்கள் Work Pass Holder General Lane வழியாக வரலாம் என கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singapore-வுடன் இணைந்து இருங்கள்!
Tamil Daily Singapore Telegram: https://t.me/tamildailysg